ணையதள சேவை முடக்கப்பட்ட உக்ரைனின் தலைநகர் கீவ் உள்படபல பகுதிகளுக்கு எலன்மஸ்க் செயற்கை கோள் மூலம் இணையதள சேவை வழங்கி இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி நடத்தி வருகின்றனர். ஆனால் தலைநகர் கீவ் ராணுவ தளத்தை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்,  உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான்மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் மூலம் ஸ்டார்லிங் எனும் செயற்கைக்கோள் வழியாக  இணைய இணைப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே எலன் மஸ்க் நிறுவனத்தின் செயற்கை கோள்கள்  Falcon1 வெற்றிகரமாக புவி சுற்று வட்ட பாதையை சுற்றி வருகிறது. இதுபோல மேலும் சில செயற்கை கோள்களையும் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள சைபர் தாக்குதலால், அங்கு இணையதள சேவை முடங்கி உள்ளது. இதையடுத்து,  எலன் மஸ்க்கிடம் உக்ரைன் நாட்டின் தொலைதொடர்பு துறை அமைச்சர் உதவி கோரியிருந்தார். அவரது டிவிட், பதிவில்,  நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தை முயற்சிக்கிறீர்கள். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. உங்கள் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணிலிருந்து திரும்புகிறது.

ஆனால், ரஷ்ய ராக்கெட்டுகளோ உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன. உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என கூறியிருந்தார்.

உக்ரைன் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை உக்ரைனில் செயல்படுத்தியுள்ளார் இதனை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் என்பது 2.000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை இயக்குகிறது. உலகம் முழுவதும் இணைய இணைப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.