வாஷிங்டன்:

லக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் எலான் முஸ்க்.

 

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் ஏற்படுத்திய எலக்ட்ரிக் கார் புரட்சி தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மாற்றத்தின் எதிரொலியாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் டெஸ்லா ஒரு பென்ச்மார்க்- ஆக விளங்குகிறது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் வெற்றி எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்புக் கொரோனா பாதிப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வர்த்தகத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த எலான் முஸ்க், மைக்ரோசாப்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் பில் கேஸ்-ஐ 3வது இடத்திற்குத் தள்ளி எலான் 2வது இடத்தைப் பிடித்தார்.

கடந்த வாரம் எலான் மக்ஸ்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதன் வாயிலாகவும், டெஸ்லா நிறுவனத்தை முதல் முறையாக S&P 500 குறியீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதன் காரணமாக டெஸ்லா பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.

இதன் எதிரொலி இந்த வாரமும் துவங்கும் காரணத்தால் எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்புத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் அதிகப்படியாக 7.24 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து இவரது மொத்த சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் முஸ்க் 2வது இடத்திற்கு முன்னேறி, மைக்ரோசாப்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் பில் கேஸ்-ஐ 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

2020ஆம் ஆண்டில் மட்டும் எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்பு சுமார் 100.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யாரும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை இந்தக் குறுகிய காலத்தில் அடைந்தது இல்லை என்பது தான் வியக்கவைக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்-ல் கடந்த ஜனவரி மாதம் 500 பணக்காரர்கள் பட்டியலில் எலான் முஸ்க் பெற்ற இடம் 35. ஆனால் கடந்த 10 மாத காலத்தில் எலான் முஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்பில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது டெஸ்லா நிறுவனப் பங்குகள் தான். இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 500 பில்லியன் டாலரை நெருங்கி வரும் நிலையில் அடுத்த சில மாத காலத்தில் எலான் முஸ்க்-ன் சொத்து மதிப்பு 180 பில்லியன் டாலரை தாண்டும் எனக் கணிக்கப்படுகிறது.

இதனால் அடுத்த சில மாதத்தில் முதல் இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பிசோஸ் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு எலான் முஸ்க் முதல் இடத்தை அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.