ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோக்களை அனுப்பும் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

இது அறிவியில் புனைக்கதையில் வருவதுபோல் தோன்றினாலும், நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான ஸ்டார்ஷிப், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதன் முதல் செவ்வாய் கிரகப் பயணத்தை தொடங்கும் என்று மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட ரோபோவான ஆப்டிமஸ், இந்த பயணத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

சிவப்பு கிரகத்திற்கு ஆளில்லா பயணங்களைப் பற்றி மஸ்க் முன்பு விவாதித்திருந்தாலும், ரோபோக்களை அனுப்புவது குறித்து குறிப்பிடுவது இதுவே முதல்முறை.

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவியை உருவாக்கி வருகிறது, இது சரக்குகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கும் இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கும் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய விண்கலமாகும்.

பாரம்பரியமாக, செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பயணம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும், ஆனால் மஸ்க் பயண நேரத்தை 90 நாட்களுக்குக் குறைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.