தமிழக கேரள எல்லையான வாலையாறில் யானைகள் அவ்வப்போது ரயில் பாதையை கடப்பதும் ரயில் விபத்தில் சிக்குவதும் வழக்கமாக நடைபெறுகிறது.
நேற்றிரவு கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாலையாறு கஞ்சிக்கோடு இடையே உள்ள கொட்டாம்பட்டி எனும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 3:30 மணியளவில் யானைக் கூட்டம் ஒன்று ரயில்வே லைனை கடக்க முயற்சி செய்தது.

அப்போது ரயில் மோதியதில் பெண் யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதோடு வனப்பகுதியில் ரயில் என்ன வேகத்தில் இயக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel