காசிரங்கா:

சாம் மாநிலத்தில் பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ்வின் உணவு மற்றும் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் சோனித்பூரில் யோகா குரு பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்கா சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் 150 ஏக்கரில்  அமைக்கப்பட்டு  வருகிறது.  அங்கு பல்வேறு கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்தப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  அந்த பகுதியில் ஒரு ஆண்யானை, பென் யானை மற்றும் குட்டி யானை  சுற்றித் திரிந்தன. இதில் குட்டியானை திடீரென அந்த பகுதியில்  கட்டிடப்பணிக்காக  தோண்டப்பட்டிருந்த சுமார் 10 ஆடி ஆழ குளிக்குள் விழுந்தது. அதை மீட்க முயன்ற தாய் யானை மற்றும் ஆண் யானையும் குழிக்குள்  விழுந்தன. இதில்,  பெண் யானைக்கு கால்முறிவு ஏற்பட்டது.  அதனால் எழுந்திருக்க முடியவில்லை. குழியில் விழுந்த ஆண் யானை மட்டும் பள்ளத்தில் இருந்து வெளியேறிவிட்டது.   அது பெண் யானையை மீட்க முயற்சி செய்தது, ஆனால் முடியவில்லை. கால் முறிந்த பெண் யானை சில மணி நேரத்தில் உயிரிழந்தது.   இதை அறியாத குட்டி யானை தாய் யானையை எழுப்ப முயற்சி செய்து பாசப் போராட்டம் நடத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், குட்டியானையை  மீட்டு, காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பதஞ்சலி உணவு பூங்காவின் நிர்வாகி உதய் கோஸ்சுவாமி மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வனப்பகுதிகள் அழிக்கப்ப்டடு நிறுவனங்களாகவும், சொகுசு காட்டேஜ்களாக மாறி வருவதால் வன விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருகின்றன. இது ஆபத்தாகவே முடிந்து விடுகிறது.

சமீபத்தில் கேரளாவில் கிராமப் பகுதிக்குள் புகுந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாபா ராம்தேவ்க்கு சொந்தமான  இடத்தில் யானை சிக்கி உயிரிழந்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோக சம்பவம் குறித்து கூறிய அசாம் வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்ம்,  இது மிகவும் சோகமான சம்பவம். இப்பகுதி அடிக்கடி யானை செல்லும் பகுதி என்பது தெரிய வந்திருப்பதால்,  பதஞ்சலிக்கு வழங்கப்பட்ட தொழில்துறை பூங்கா நிலம் யானை நடைபாதையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இந்த பகுதி பல தசாப்ங்களாக யானை நடமாடும் பகுதி என்று உள்ளூர் மக்களும் தெரிவித்து உள்ளனர்.  அங்கு  தொழிற்சாலையை அமைக்கும் நிறுவனத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு எனது துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.