புதுடெல்லி:
நிதிஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு தேவையான எலக்கட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கேயே தயாரிக்க வேண்டும். இங்கிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஜீரோ(0)வாக  இருக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
electronics-kWqC--621x414@LiveMintelectoronis
பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு பொறுப்பேற்ற பிறகு, சென்ற ஒரு ஆண்டில் மட்டும் 37 மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இந்தியா முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதன்மூலம், 40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும்,  மறைமுகமாக 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் 11 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் சீனாவை சேர்ந்த ஜியோனி, ஜியோமி ஆகிய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன.
உள்நாட்டை சேர்ந்த கார்பன், லாவா, மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், ஜிவி, ஐடெல், எம்டெக் ஆகிய நிறுவனங்களும் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.
சீனாவை சேர்ந்த லி இகோ நிறுவனமும் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து தயாரிப்பை துவங்க உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தற்போது ஒரு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 2020-ம் ஆண்டுக்கு பிறகு எலக்ட்ரானிக் இறக்குமதியே செய்ய வேண்டிய நிலை இருக்காது என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.