விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று  2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கேங்மேன்களை கள  உதவியாளர்களாக மாற்றக் கோரி  மாநிலம் முழுவதும் 12 மையங்களில் காத்திருப்பு போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள்  தொடங்கி உள்ளனர். விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று (அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு 2019, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 6 சதவிகித ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தை நேற்று (அக்.7) செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலச் செயலர் கே. அம்பிகாபதி தலைமை வகித்தார்.   இந்தப் போராட்டத்தில் திட்டக்குழு தலைவர் ஆர்.சேகர், செயலர் ஆர். அருள், பொருளாளர் கண்ணன், கோட்டச் செயலர்கள் ஏ. கன்னியப்பன் (செஞ்சி), கே.ஏழுமலை (கண்டமங்கலம்), அசோக்குமார் (விழுப்புரம்) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதுதொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் சேகர் கூறுகையில், “மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதன் காரணமாக மின் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவி யாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு பதில் ‘கேங்மேன்’ எனும் புதிய பதவியை 15  ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் அப்போதைய அதிமுக  அரசு உரு வாக்கியது.  அதன்படி, சுமார்  9,600-க்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட்டனர். களஉதவியா ளர்கள் செய்யும் பணிகளையே கேங்மேன்கள் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இணை யான ஊதியம், பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் கேங்மேன்களை நேரடியாக கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கு வதோடு, கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு உள்முகத்  தேர்வில் வாய்ப்பு தர வேண்டும். 2019-2023 காலத்தில் மறுக்கப்பட்ட 6 சதவீத ஊதிய உயர்வு  வழங்க வேண்டும். மின்னோட்டம் இல்லாத இடங்களில் மட்டுமே கேங்மேன்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5ஆயிரம் கேங்மேன்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மண்டல பொறியாளர் அலுவல கங்கள் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை கே.கே.நகர்  மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத் தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் மத்திய அமைப்பின்  பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர் கூறுகையில்,  “மின்சாரம் செல்லாத இடங்களில் மட்டுமே பணி யாற்ற வேண்டும் என்ற நிபந்தனையோடு கேங்மேன் கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், ஆபத்தான மின் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால்  80-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி உயிரிழந் துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாரியத்திற்காக உழைத்தவர்களை, கேங்மேன் களை கள உதவியாளர்களாக பணி உயர்வு செய்து விட்டு, அதற்கு பிறகு ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்புவதில் சங்கத்திற்கு ஆட்சேபணை இல்லை. கேங்மேன்கள் களஉதவியாளர் என்ற  உத்தரவு கிடைக்காமல் காத்திருப்பு போராட டத்தை கைவிட மாட்டோம்” என்றார்.

இந்தப் போராட்டத்தில் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மாநிலச் செயலாளர் கணேஷ்ராவ், காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் ஏ.முருகா னந்தம், மின்துறை பொறியாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் அருள்குமார் உள்ளிட்டோர் பேசினர்.