வேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் சரவணன் என்பவர், வணிக ஆய்வாளராக பணிபுரிகிறார். ஒரு முனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றுவதற்காக ரூ. 2 ,350 லஞ்சமாக கேட்டிருக்கிறார். இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள், லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
வாலாஜாபேட்டை பகுதி மக்களின் புகாரை தொடர்ந்து, மின்வாரிய அலுவலகம் வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சம் வாங்க முற்பட்டதாக சரவணனை கைது செய்தனர்.
[youtube-feed feed=1]