சென்னை:
தார் எண்ணை இணைக்காமல் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆதார் எண்ணை இணைக்காமல் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.