மும்பை

மும்பையில்  ஒரு மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நேற்று மும்பை மேற்கு ரயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்டில் இருந்து காலி மின்சார ரயில் ஒன்று பணிமனை நோக்கி புறப்பட்டு சென்றபோது. மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே திடீரென ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. என்ஜின் ஓட்டுநர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்/

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடம்புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் சர்ச்கேட்டில் இருந்து மும்பை சென்ட்ரல் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஆயினும் ஒரு சில ரெயில்கள் சர்ச்கேட்டில் இருந்து போரிவிலி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் இருந்து விரைவு வழித்தடம் வழியாக திருப்பி விடப்பட்டு மற்ற ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது..ரயில் காலியாக பணிமனைக்கு சென்றதால் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினித் அபிஷேக் தெரிவித்தார்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு பணி நிறைவு பெற்று தடம்புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்ட பிறகு அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சீரானது.