அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி வரை 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பவநகர் மாநகராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 575 வார்டுகள் உள்ளன.
பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை சேர்ந்த மொத்தம் 2276 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
நரன்புராவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார். வதோதராவில் மதியம் ஒரு மணி வரை 14.84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 43 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1 கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
[youtube-feed feed=1]