சென்னை: தமிழ்நாட்டைச் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது. 2022ல் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளதால், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமும், சமூக ஆர்வலர்களும், இலவசங்களை அறவே ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரியிறைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து வருகிறது. இது மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு, 2021ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும என அறிவித்தது. அதன்படி ஆட்சியை கைப்பற்றியதும் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் முலம் பல கட்டங்களை அறிவித்து, பெண்களை கவர்ந்து வருகிறது. மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது. மாநில நிதியமைச்சா் ஹா்பல்சிங் சீமா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.1,000, பட்டியலினப் பெண்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைநகா் சண்டீகரில் முதல்வா் பகவந்த் மான் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வர், பைசாகி பண்டிகை முதல் உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணிப்பிக்கும் நடைமுறை தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பயனடைய முடியும் என்றாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்தத் திட்டத்தை தோ்தல் வாக்குறுதியாக ஆம் ஆத்மி அளித்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தற்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]