டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. தமிழகத்தில் தர்மேந்திரா குமார், மது மகாஜன், பி.ஆர்.பாலக்ரிஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில், மஜ்ஜித் சிங் சிறப்பு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel