டெல்லி: கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேலாண்மை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 10 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவராக உம்மன்சாண்டி உள்ளார்.
இது தவிர முள்ளபள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதாலா, தாரிக் அன்வர், முரளிதரன், சசிதரூர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு, தேர்தல் வியூகம், பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து இக்குழு ஆலோசனை நடத்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.