சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் , தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி , மேற்குவங்கம், அசாம் , கேரளா ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் இந்த வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில், மம்தா அரசு ஒத்துழைக்க மறுப்பதால், உச்சநீதி மன்றம் தலையிட்டு, நீதிபதிகளைக்கொண்டு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில்,. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆய்வை மேற்கொண்டனர். இதற்கு மாநிலத்தை ஆளும் மம்தா கட்சியான திரிணாமுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், தூய்மையான பட்டியல் வாக்காளர் பட்டியலின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதில் ஆணையம் உறுதியாக உள்ளது. தூய்மையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது.
மாநிலத்தில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அச்சமோ அல்லது சாதகமோ இல்லாமல் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். தேர்தல் காலங்களில் நிகழும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை கடைபிடிக்கப்படும். தேர்தலின் புனித தன்மையைச் சிதைக்கும் எந்தவொரு செயலையும் ஆணையம் ஏற்காது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான சூழல் உறுதி செய்யப்படும் என்றார்.
[youtube-feed feed=1]