டில்லி,

துணைஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தற்போது துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய துணைஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி இன்று அறிவித்தார்.

அதன்படி

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூலை 18

தேர்தல் – வாக்குப்பதிவு: ஆகஸ்டு -5

வாக்கு எண்ணிக்கை : ஆகஸ்டு-5

தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரி இரண்டு முறை துணை ஜனாதிபதி பதவி வகித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட ஹமீத் அன்சாரி,  மீண்டும் 2012ம் ஆண்டு துணைஜனதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.