டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று  சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து எம்.பி.க்களும் அவைக்கு வர வேண்டும் என கட்சி கொறடாக்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவி நியமனத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால்,  நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து,   பாஜக சார்பில்,  ஓம்பிர்லா 2வது முறையாக  போட்டியிடுகிறார். அவர் நேற்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே வேளையில் எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். அவரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். . இதைத்தொடர்ந்து துணை சபநாயகர் பதவிக்கும் கடுமையான போட்டி எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று முதல்கட்டமாக சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் தே.ஜ. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவை துணை சபாநாயகர் பதவியை தங்களது தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில், அதை ஏற்க பாஜக தரமறுத்ததால் போட்டி உருவாகியுள்ளது.

இந்திய வரலாற்றில் 3வது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக 1952 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

18வது மக்களவை கடந்த 24ந்தேதி (நேற்று) தொடங்கியது. அதைதொடர்ந்து தற்காலிக சபாநயாகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்ம பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்த தற்காலிக சபாநயாகர் மக்களவை எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வருகிறார். நேற்று தொடங்கிய பதவி பிரமாணம் நிகழ்வு  நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.