டெல்லி: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது. அதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார். முன்னதாக மே 2ந்தேதி 5 மாநில வாக்குகளும் எண்ணப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகம் உள்பட புதுச்சேரி, அசாம், கேரளா, , மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியும், புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ஆம் தேதியும், மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது.
இந்த 5 மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி உள்ளது. அதன்படி இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது.