டெல்லி: தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை அந்தந்த வேட்பாளரும், கட்சிகளும் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர் குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கான சில வழிகாட்டுதல்களையும் கூறி உள்ளது.
4 நாட்களுக்கு முன்பு ஒரு முறை, 5 மற்றும் 8வது நாட்களுக்குள் 2வது முறை வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3வது முறை, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.