மும்பை

தேர்தல் ஆணைஅம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் சொந்த மாவட்டங்களில் பதவி வகிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தயாராகி வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆயினும் இந்த உத்தரவை அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. முழுமையாக அமல்படுத்த தவறியுள்ளனர்.

இதையொட்டி தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்த்துடன் ம் உரிய விளக்கம் அளிக்குமாறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசும் அனுப்பி உள்ளது.

அந்தி நோட்டீசில்,

”தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 31-ந் தேதி அன்று பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் மாநில அரசு நிர்வாகம் இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. மாநில நிர்வாகம் விதிமுறைகளுக்கு இணங்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற செயலற்ற தன்மையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் ”

எனத் தெரிவித்துள்ளது