சென்னை:
டிகர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 14 அரசியல் கட்சிகள் உட்பட 253 கட்சிகள் செயலற்றவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 கட்சிகள் உள்பட 86 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் , தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தலைமையிலான ஆய்வுக் குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்குழு நடத்திய ஆய்வை அடுத்து 86 அரசியல் கட்சிகளின் தகுதி நீக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி உட்பட 253 கட்சிகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.