டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
பீகாரில் சட்டமன்ற ஆட்சிக்காலம் இன்னும் இரு மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பீகார் தேர்தல் குறித்த உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், அதனுடன் தமிழகம் உள்பட 65 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணை அறிவிப்புடன், இந்த இடைத்தேர்தல்ககளுக்கான அறிவிப்பு தேர்தல் ஆணைக்குழுவால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.