டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இந் நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை மற்றும் இடைத் தேர்தல் குறித்து தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் மார்ச் 27ம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி இரவு 7.30 மணி வரை கருத்துக்கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel