
கெய்ரோ: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில், காலிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்து வெளியேறினார்.
தற்போது கெய்ரோவில் நடைபெற்றுவரும் எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில், காலிறுதிக்கு முன்னேறினார் ஜோஷ்னா. காலிறுதியில், எகிப்து நாட்டின் நூல் எல் ஷெர்பினியுடன் மோதினார்.
இப்போட்டியை, 5-11, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் இழந்து, தொடரிலிருந்து வெளியேறினார் ஜோஷ்னா.
இவர் வெளியேறியதன் மூலம், இத்தொடரின் எஞ்சியப் போட்டிகளுக்கு, இந்திய நட்சத்திரங்கள் யாரும் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel