கெய்ரோ.

யங்கரவாதிகள் முகாம்மீது எகிப்து வான்வழி தாக்குதல் நடத்தியது.

சமீபத்தில் லிபியா நாட்டின்  தர்னா நகரில் உள்ள பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக எகிப்து பயங்கரவாதிகள்முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தகவலை எகிப்து அதிபர்  அப்துல் ஃபடா அல் சிசி தொலைக்காட்சி செய்தி ஒன்றில் இதை உறுதி செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை  காலை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் குழு ஒன்று பஸ்மீது துப்பாக்கி சூடு நடத்தி 28 பேரை கொன்றார்கள்.  மேலும் 24 பேர் காயமடந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் கும்பலில் 10 பேர் இருந்தாகவும், அவர்கள் அனைவரும்   பாதுகாப்புப் படையினர் போன்ற சீருடையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த பஸ்சில் சென்றவர்கள் அனைவரும் சர்ச்சுக்கு சென்றுகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் என  கூறப்பட்டது.

 

எகிப்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை   70 க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.