சென்னை

ன்று எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 3 ஆம் தேதி பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வரும் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார் . காவல்துறையினர் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கஆட்சேபனை தெரிவிக்காததால்ல் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.