டெல்லி: மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தற்போதை அமைச்சரவையில் இருந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கும் பிரதிநிதித்தும் வழங்கும் வகையில், மந்திரி சபை மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் சில அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய கட்சித்தலைவ உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரமேஷ் பொக்ரியால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார்.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜினாமா செய்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தேபஸ்ரீ சவுத்திரியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா ஆகிய 4 பேர் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.