பெங்களூரு:
கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம் செய்து பாரதியஜனதா கட்சி அறித்து உள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட விஜயேந்திரன், நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவருக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கி உள்ளது பாரதியஜனதா கட்சி.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், எடியூரப்பா மகன் விஜேந்திரன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை பாஜ ஏற்கவில்லை. இதன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரன் நேற்று திடீரென்று மைசூரு நஞ்சன்கூடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து, மாநில பொதுச்செயலாளராக விஜேந்திரனை நியமனம் செய்து பாஜ கட்சி தலைமை அறிவித்து உள்ளது.