சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையட்டி, சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் நினைவுநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த
சாமானிய மனிதன்!
தலைமுறைகள் தாண்டி,
எல்லோரும் விரும்பி விளிக்கும்
“அண்ணா”!
“தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்”
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று…”
என குறிப்பிட்டுள்ளார்.