சென்னை: உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான்அவர் செயல்படுவார்என சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை பாதிப்பு உள்ள 15 இடங்களைத் தவிர்த்து மற்றங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நகர செயலாளர் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கொண்டார். அப்போது மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாது ஆதர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  “கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றி. வருண பகவான் மழை பெய்து கொண்டே இருக்கிறார். நானும் நனைகிறேன். நான் ஒரு விவசாயி. இந்த ஆட்சியை கண்டோ, மழையை கண்டோ அஞ்சமாட்டோம்” என பேசினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி மிகபெரிய வெற்றி பெற வேண்டும் என்றவர், திமுகவுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றவர், தற்போது திமுக ஆட்சியில் விலை உயர்ந்து விட்டது என்றவர், தற்போதைய நிலையில், விலைவாசி உயர்ந்து விட்டது, என்றவர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்த விழுத்து, வீட்டு மக்களை பார்ப்பதை விட்டு, நாட்டு மக்களை பாருங்கள்.  வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாளைய தினம் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது. என்ன நடக்கிறது முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.

கருணாநிதி அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதியை திமுகவின் தலைவர்களில் ஒருவராக கொண்டு வருவதற்கு தான் அந்த முடிசூட்டு விழா.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன? ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக செயல்படுவார்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாநிலத்துக்கு ஒரு முதல் அமைச்சர்தான் இருப்பார். ஆனால், தமிழகத்துக்கு 4 முதல் அமைச்சர்கள் உள்ளனர். மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன் ஆகியோர் தான் 4 முதல் அமைச்சர்கள்.

திமுக என்றால் குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் விசுவாசமாக இருந்தால், உழைப்பவர் எவராக இருந்தாலும் அவருடைய வீட்டு கதவை தட்டி பதவி கொடுக்கின்ற கட்சி அதிமுக. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ, அமைச்சர், நாடளுமன்ற உறுப்பினர், முதல் அமைச்சர் கூட ஆகக்கூடிய கட்சி அதிமுக.

இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.

அதுபோல, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, கு.சித்ரா முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன், அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி, மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.