சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 2வது கட்டமாக,  கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு வாக்குறுதிரகளை  வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள்,. மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில், தேர்தல்  மற்றும் கூட்டணி அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

அதன்படி,   தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்   பல்வேறு கடன்கள் தள்ளுபடி உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். 

ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்

 ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

 மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.

[youtube-feed feed=1]