சென்னை: எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில் உள்ளார், அதிமுக தானாகவே அழிந்துவிடும் என திமுக அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க., இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என கூறியதுடன், . தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியதுதான் என்றும், திமுக கூட்டணி விரைவில் பிளவுபடும் என்றவர், மாநிலம் முழுவதும் கச்சா போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுக கூட்டணி உடைந்துவிடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது என்றவர், ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது. தலைமை பலவீனமாக இருக்கும்போது அந்த இயக்கம் தானாகவே அழிந்துவிடும் என்று விமர்சித்தவர், திமுக கூட்டணி உடைந்துவிடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார், அவரது பகல் கனவு பலிக்காது என்று கூறியதுடன், இபிஎஸ் தலைமையிலான அதிமுக பலவீனமாக உள்ளதால் அவர் விரக்தியாக பேசி வருகிறார் என கூறினார்.
தமிழக கவர்னர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் உலா வருகிறதே என்ற கேள்விக்கு, அவரை மாற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது என்று அவர் கூறினார்.