துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

தற்போது பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. வேடன் வந்தாச்சோ என தொடங்கும் இந்த பாடல் வீடியோ, கார் சேசிங் காட்சிகளோடு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஒரு காட்டுல ஒரு ராஜா இருந்துச்சாம்னு அருண் விஜய் குரலில் தொடங்கும் இந்த பாடல் ராப் கலந்த ஸ்டைலிஷ் பாடலாக கிட்டத்தட்ட வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க பாடலை ஒத்துள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.