மும்பை

மும்பை நகர தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தாக ஷில்பா ஷெட்டியின் கனவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி மும்பையில் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் வசித்து வருகிறார்.    இவர் தமிழிலும் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    இவர் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமாக எசன்ஷியல் ஹாஸ்பிடாலிடி லிமிடட் என்னும் ஒரு நிறுவனம் உள்ளது.  இந்த நிறுவன இயக்குநர்களில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர் ஆவார்.

இந்நிறுவனத்தில் ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ் என்னும் ரிய எஸ்டெட் நிறுவனம் ரூ.44.11 கோடி முதலீடு செய்துள்ளது.  அத்துடன் இந்த நிறுவனத்துக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.31.45 கோடி, ரூ.30.45 கோடி மற்றும் 117.17 கோடி என மூன்று முறை வழங்கியுள்ளது.   ஆர்கேடபிள்யூ நிறுவனத்துக்கும் மும்பை நிழல் உலக தாதா இக்பால் மிர்சி என்பவருக்கும் வர்த்தக உறவு உள்ளது.

அதையொட்டி இந்த நிறுவனத்தின் இயக்குநரான ரஞ்சீத் பிந்தரா கைது செய்யபட்டுள்ளார்.   அப்போது இந்த நிறுவனத்தின்  இயக்குநர் ராஜ்குந்த்ராவின் எசன்சியல் ஹாஸ்பிடாலிடி நிறுவனத்திலும் இயக்குநராக உள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே இக்பால் மிர்ச்சி மற்றும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் வர்த்தகத் தொடர்பு உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அதையொட்டி அமலாக்கத்துறை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தராவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.  அந்த சம்மனில் ராஜ் குந்த்ரா தனக்கும் இக்பால் மிர்ச்சிக்கும் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து வரும் 4 ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.