நாடாளுமன்றத்தில் எனது சக்கரவியூக உரைக்கு பதிலாக ED ரெய்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சக்கரவியூக பேச்சு ஓரிருவருக்கு பிடிக்கவில்லை அதனால் ரெய்டுக்கு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறையில் உள்ள சிலர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூலை 29 அன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 குறித்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாகத் தாக்கினார். நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர் என்றார்.
மகாபாரதப் போரின் சக்ரவியூக அமைப்பைப் பற்றி குறிப்பிட்ட ராகுல் காந்தி, 6 பேர் சேர்ந்து அபிமன்யூவை நயவஞ்சகமாகக் கொன்றனர்.
https://x.com/RahulGandhi/status/1819106372396765206
அதேபோல், தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 6 பேர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை வடிவிலான புதிய ‘சக்ரவ்யூகம்’ நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் தனது இந்த பேச்சுக்குக்காக அமலாக்கத்துறை ரெய்டுக்கு மத்திய அரசு தயாராகி வருவதாகவும் அவர்களை டீ, பிஸ்கெட்டுடன் இரு கரங்களை நீட்டி வரவேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.