டில்லி
டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தார். கடந்த 2010ம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனம் தர வேண்டிய ரூ.90 கோடி கடன் தர வேண்டியிருந்தது,.
எனவே நிறுவனத்துக்குகு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உறுப்பினர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தில் முறைகேடு நடந்தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளது. அண்மையில் ராகுல், சோனியாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது. நேற்று டெல்லி பகதூர் ஷா ஜபர் மார்க் பகுதியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்பட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், ‘சோனியா, ராகுலிடம் நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி, இந்த வழக்கில் மேலும் பல ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளது’’ எனத் தெர்வித்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த சில போலி நிறுவனங்களுக்கு இதில் தொடர்பிருப்பதால், அந்த இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.