சென்னை
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தத் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள் மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்களில் ஆகாஷ் பணியாற்றியிருந்தார்.
இவர் தற்போது தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை தற்போது தயாரித்து வருகிறார், தவிர மேலும் அதர்வா – கயாடு லோஹர் நடிக்கும் இதயம் முரளி, சிம்புவின் 49வது படத்தையும் தயாரித்து மேலும் சில படங்களை தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
திரையுலகில் உதவி இயக்குனராக நுழைந்த ஆகாஷ் பாஸ்கரன் எப்படி திடீர் என்று இவ்வளவு படங்களை தயாரிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில், நடிகர்கள் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இன்று காலை 6.15 மணி முதல் 07.30 மணி வரை, இவர் வசிக்கும் தேனாம்பேட்டை, கேபி. தாசன் சாலையில் அப்பார்ட்மென்டில் PY-01, DC-1951 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதுவரை இந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது. எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.