மும்பை

ளும் கட்சிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது,.  இங்கு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.   இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மீது மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது.

இதையொட்டி இக்கட்சிகளின் முக்கிய தலைவர்களான ஏக்நாத் கட்சே, பிரதாப் சர்னாயைக், அனில் தேஷ்முக் ஆகியோர் மீது அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.    இந்த கூட்டணிக் கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அவ்வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார், “நான் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியதைக் கண்டதில்லை. அதே வேளையில் ஏக்னாத் கட்சே, பிரதாப் சர்னாயக், அனில் தேஷ்பாண்டே உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டும் செயல்படுகிறது என்பது தெளிவாகி உள்ளது.   இன்று பாஜக ஆட்சியில் உள்ளதால் அமலாக்கத்துறை அவ்வாறு செயல்படுகிறது. நாளை வேறு யாரும் ஆட்சியைக் கைப்பற்றினால் இந்த நிலை மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.