சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவிர, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடர அனுமதி கோரியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற விசாரணையை அடுத்து டெல்லி ரௌஸ் அவின்யு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதன் மீது ஏப்ரல் 25ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்றும் மோடி அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு காங்கிரஸ் என்றும் அடிபணியாது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.