விஜய் மல்லையா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மும்பை:

ஐ.டி.பி.ஐ., – கேஎப்ஏ வங்கி கடன் மோசடி தொடர்பாக, லண்டனில் தங்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மும்பை நீதிமன்றத்தில்  அமலாக்கத்துறை 57 பக்க  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. .
அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த வருடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்காக பதிவு செய்தனர். மேலும் விஜய் மல்லையாவின் ரூ.9,600 கோடி சொத்தை முடக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து அமலாக்கத்துறை  அதிகாரிகள், “இந்த குற்றப்பத்திரிகையில், ரூ.400 கோடி பணத்தை எவ்வாறு மல்லையா சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்றார் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளோம். இந்த மோசடியில் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் பங்களிப்பு குறித்தும் அவர்களின் வாக்குமூலம் குறித்தும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்


English Summary
ED files charge sheet against vijay mallya