அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது பிபிசி செய்தி நிறுவனம்.
இதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் அந்நிய செலாவணி பரிமாற்றத்தில் விதிமீறல் நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.