திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது.
உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், முன்ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறையும், சுங்கத்துறையினர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷின் நடவடிக்கைகள் சிவசங்கருக்கு தெரியும் என்றும் விசாரணையில் வாதிடப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. அதை தொடர்ந்து, திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிவசங்கர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.