டெல்லி: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை டில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 4) பி.எம். எல்.ஏ. சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய சமூகவாத ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், எஸ்டிபிஐ கட்சி அதனை நிராகரித்துள்ளது. எனினும், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேற்கண்ட தொடர்புகள் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அக்கட்சியின் தேசிய தலைவரான ஃபைஸி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.