டில்லி:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மாலை 5 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்த்தி அடைந்துள்ள நிலையில், அவரது செய்தியாளர் சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி துணைத்தலைவர், முன்னாள் தலைவர் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை நிதி அமைச்சர் நிர்மலா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட்டுக்கு பல தரப்பிடம் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. ஜனவரி-மார்ச் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக சரிந்துள்ளதால், அரசு, பொருளாதாரம் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் பலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மேலும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும் என்றும், வாகன விற்பனை சரிவை சரிப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாட்டின் தொழிற்வளர்ச்சி முடங்கிப்போய் உள்ளது. லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, எஃப்.பி.ஐ.கள் மீதான மிகுந்த பணக்கார வரி போன்ற சில பட்ஜெட் நடவடிக்கைகளை திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக பிரபல செய்தி ஊடகமான பிடிஐ தெரிவித்து உள்ளது.
மேலும் பொருளாதார வளர்ச்சியை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன.
முன்னதாக நேற்று பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நிர்மலா சீத்தாராமன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]