சென்னை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்படும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.. இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை பதவிக் காலம் நவம்பர் 26 ஆம் தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் டிசம்பர் 29 ஆம் தேதியும் முடிவடைகிறது. அதனால் இந்த இரு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இரு மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது, பாஜக – 102, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 40 மற்றும் ஏக்நாத் ஷிண்டேசிவசேனா- 38 ஆகிய பலத்துடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வென்றுள்ளது. பாஜகவிற்கு 26 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜார்கண்ட் சட்டசபையில் மொத்த இடங்கள் 81. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 41 தேவை. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மாலை தேர்தல் தேதி வெளியாகிறது.