தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு மாநகராட்சிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களின் வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.
https://twitter.com/annamalai_k/status/1495595317945057281
மேலும், தி.மு.க. வினரின் இந்த விதிமீறல்கள் முறித்து இந்திய தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த டீவீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
ECI does not have mandate to conduct Rural & Urban Local Bodies' elections. These are conducted by separate authorities i.e. State Election Commissions under Article 243 K & 243 ZA of the Constitution of India. You may contact the concerned authority for your query/complaint. pic.twitter.com/wuC4i6fwBM
— Election Commission of India (@ECISVEEP) February 21, 2022
இதற்கு, பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த மாநில தேர்தல் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று என்றும் இதில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் கூறி அண்ணாமலை புகாருக்கு கைவிரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.