கொழும்பு:
இலங்கை கண்டி பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரம் காரணமாக, சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடம் இருந்த அந்த துறையை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் அதிபர் சிறிசேனா.
அதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு துறையை, பொது நிர்வாகம் கவனித்து வரும் அமைச்சர் மத்தும பண்டாரவிடம் ஒப்படைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்த ரஞ்சித் மத்துமபண்டார, சட்டம் ஒழுங்கு துறையை ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்றது. அதன் காரணமாக அந்தபகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இலங்கை முழுவதும் அவசர கால பிரதடனமும் செய்யப்பட்டது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள், மொபைல் போன் சேவைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த பிரதமர் ரணிலிடம் இருந்து அந்த துறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பறித்து, வேறு அமைச்சரிடம் வழங்கினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.