
பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.
இந்த நிலையில் பாமக வேட்பாளர்களின் நான்காவது பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் பவானி தொகுதிக்கு ராமநாதன் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மகேந்திரன் மனம் உடைந்து காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் இன்று காலை, பவானி பாமக அலுவலகத்தில் மகேந்திரன் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அப்போது ராமநாதனும் அவரது ஆதரவாளர்களும், மகேந்திரனிடம் ஆதரவு கேட்க வந்தார்கள். ஆனால மகேந்திரன் ஆதரவாளர்கள், தடுத்தார்கள். அதை மீறி அலுவலகத்தில் நுழைய ராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் முயன்றனர்.
அந்த நேரத்தில் மகேந்திரன், அலுவலகத்தின் உள்ளே சென்று பூச்சி மருந்தை குடித்துவிட்டார். பிறகு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ராமநாதன் மாற்றப்பட்டு பவானி பாமக வேட்பாளராக மகேந்திரன் அறிவிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel