மும்பை
மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தின் மீது காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணயம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
மும்பை மலபார் ஹில் பகுதியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அரசு இல்லமான ‘வர்ஷா’ பங்களா உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அரசு பங்களாவில் அரசியல் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது என கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வர்ஷா பங்களாவில் உள்ள அலுவலகக் கூட்ட அரங்கில் தனது கட்சி மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்திய காட்சிகள் செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகின.
காங்கிரஸ் கட்சி இது குறித்துத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. காங்கிரஸ் கட்சியின் புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் முதல்வர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தெற்கு மும்பை தேர்தல் அதிகாரி, மகாராஷ்டிர முதல்வரின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், வர்ஷா பங்களாவில் நடந்த கட்சிக் கூட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரப்பட்டு உள்ளது.