டில்லி

ரும் நவம்பர் மாதம் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விரைவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலச் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களில் புதிய அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வந்தது.  இதையொட்டி அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களுடன் இணைந்து இந்த முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்தது.

சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று இந்த மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  நவம்பர் 7 முதல் 30 வரை  இந்த 5 மாநிலங்களிலும் எனப் பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் சத்தீஸ்கரைத் தவிர மீதமுள்ள 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந்தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

சத்தீஸ்கரின் 20 தொகுதிகளிலும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கு 23 ஆம் தேதியும், தெலுங்கானாவின் 119 இடங்களுக்கு 30-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது.